ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

Siva

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (17:14 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதா நிறைவேறினால் இந்தியாவின் ஜிடிபி உயரும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்நாத் கோவிந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து உலக தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்களை கொண்ட குழுவை உருவாக்கி, அந்த குழுவின் அறிக்கையை தான் அரசுக்கு சமயத்தில் சமர்ப்பித்துள்ளோம் என்று கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்து 1 முதல் 1.5% வரை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

இந்த திட்டம் நாட்டு மக்கள் அனைவரும் முன்னேற்றத்திற்கு ஏற்றது என்றும், மற்ற அம்சங்களிலும் இந்த திட்டத்தை பின்பற்றுவது தேசத்துக்கு நல்லது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ராம்நாத் கோவிந்த் தலைமையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வு குழு அமைக்கப்பட்டது என்பதும், இந்த குழு 191 நாட்கள் ஆய்வு செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்