ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சில் அஸ்வின் முதலிடம்!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (21:56 IST)
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு  இன்று  வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொரு மாதமும் சிறந்த டெஸ்ட், ஒரு நாள், டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐசிசி டெஸ்ட் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்; கவாஸ்கர் கணிப்பு..!
 
இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் பண்ட் 9 வது இடத்திலும், ரோஹித் சர்மா 10 வது இடத்தில்,   கடைசி  186 ரன்கள் குவித்த கோலி 13 வது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லபிசேன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

பந்து வீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 2 வது இடத்திலுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்