கோலி இன்னும் பசியோடுதான் இருக்கிறார்… கம்பீர் நம்பிக்கை!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (15:00 IST)
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர், தற்போது இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய கிரிக்கெட்டின் வீரர்களான தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டாக பார்க்கப்படாமல், தனிநபர் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பேசிவந்தார்.

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போதே இருவரும் கைகொடுத்துப் பேசி சமாதானம் ஆனார்கள். மேலும் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது “எங்களுக்கு இடையிலான உறவை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார். இந்நிலையில் நாளை வங்கதேச டெஸ்ட் தொடர் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ஒன்றை எடுத்து பிசிசிஐ பகிர்ந்தது. அதில் இருவரும் நெருக்கமான நண்பர்கள் போல பேசியிருந்தார்கள்.

இந்நிலையில் கோலி தற்போது பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறி வரும் நிலையில் அதுபற்றி கம்பீர் பேசியுள்ளார். அதில் “கோலி இன்னமும் பசியோடுதான் இருக்கிறார். அவர் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் கண்டிப்பாக ரன்களை சேர்ப்பார் என நம்புகிறேன். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் அவர் அதிக ரன்களை சேர்ப்பார். நம் எல்லோருக்குமே தெரியும் அவர் தன்னுடைய இடத்துக்கு சென்றுவிட்டால் எப்படி ரன்குவிப்பார் என்று” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்