இந்நிலையில் நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இந்த வார இறுதிக்குள் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் மே 16 ஆம் தேதி முதல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மே 23 ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் நான்கு ப்ளே ஆஃப் போட்டிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.