இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு முன்னதாக நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது.
இந்த தோல்விகள் எல்லாம் இந்திய அணிக்குக் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடந்தவை. டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்புப் பற்றிய மறுபரிசீலனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியின் வெற்றிகளைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.