கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணி ஆரம்பித்த நிலையில், அந்த கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்தியா கூட்டணி படிப்படியாக உடைந்து வருவதாக புறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதி அளிப்பதாகவும், ஜாதி வாரி கணக்கெடுப்பை குறித்து எதுவும் பேசவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடியுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் பணவீக்கத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்தனர், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இருவருமே பேசவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.