இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

vinoth

திங்கள், 13 ஜனவரி 2025 (09:48 IST)
கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்தது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கினர்.கடந்த சில தொடர்களில் ஷுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் விரைவில் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில்  ஷுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை.

ஆல்ரவுண்டரான அக்ஸர் படேலுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய டி 20 அணிக்கு கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யாவின் கனவு நிறைவேறாமலேயே போய்விடும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்