டி20 போட்டிகளில் சங்ககரா சாதனையை உடைத்த தோனி

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (12:53 IST)
இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 20 ஓவர்  போட்டிகளில் அதிக கேட்ச் செய்த வீக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
 
இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அடித்த பந்தை தோனி கேட்ச் செய்தார். இது தோனி 20 ஓவர் போட்டிகளில் பிடித்த 134வது கேட்ச் ஆகும்.
 
இதற்கு முன்னர் டி20 போட்டிகளில் இலங்கை வீரர் குமார் சங்ககரா 133 கேட்ச் செய்திருந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்