தல தோனியின் புதிய சாதனை

வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (18:15 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படுபவருமான தோனி ஏற்கனவே பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் நிலையில் இன்று அவர் மீண்டும் ஒரு சாதனையை செய்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6வது ஒருநாள் தொடரில் ஆம்லாவின் கேட்சை பிடித்ததன் மூலம் அவர் 600 கேட்சுகளை பிடித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். சர்வதேச அரங்கில் 600 கேட்சுகளை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் 952 கேட்சுகளையும், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 813 கேட்சுகளையும் பிடித்து முதல் இரண்டு இரண்டங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்