என்ன அடிச்சு பெரிய ஆள் ஆகலாம்னு முடிவு பண்ணிட்ட! – மெய்டன் ஓவர் போட்டு க்ரிஸ் ஜோர்டான் சாதனை!

Webdunia
வியாழன், 25 மே 2023 (09:57 IST)
நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் சாதனையாளர்களுக்கு நடுவே க்ரிஸ் ஜோர்டனும் புகுந்து ஒரு மெய்டன் ஓவர் சாதனை செய்து கொண்டார்.

நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்தது. லக்னோவை 101 ரன்களின் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டு குவாலிஃபயர் 2 நோக்கி நகர்ந்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

இந்த போட்டியில் மத்வால் உள்ளிட்ட பல பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். லக்னோ அணி வீரராக இருந்தாலும் ஓடி ரன் எடுப்பதில் சக வீரர்களை குழப்பி நிறைய ரன் அவுட்களை கொடுத்து மும்பைக்கு உதவினார் தீபக் ஹூடா.

அதேசமயம் லக்னோ அணிக்கு ரன் கொடுக்காமல் க்ரிஸ் ஜோர்டானும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார், கடந்த போட்டிகளில் அதிகமான ரன்களை அவர் கொடுத்ததால் அவரது ஓவர்கள் பதற்றத்திலேயே இருந்தது. 4வது ஓவரில் வந்தவர் 7 ரன்களை கொடுத்து கைல் மையர்ஸை தூக்கினார். அதன்பின்னர் ரோகித் அவருக்கு விக்கெட் கொடுக்கவே இல்லை.

அதன்பின்னர் 16 ஓவர் வரை மத்வால் விக்கெட் வேட்டை ஆடிய பின் லக்னோ அணியின் கடைசி வீரரான மொஷின் கான் தான் உள்ளே இருந்தார். அதனால் 16வது ஓவரை க்ரிஸ் ஜோர்டானுக்கு ரோஹித் கொடுத்தார். அதை பயன்படுத்திக் கொண்டி பேட்டிங் ப்ராக்டிஸ் இல்லாத மொஷின் கானுக்கு டாட் பந்துகளாக வீசி ஒரு ஓவர் முழுவதுமே ரன் கொடுக்காமல் ஒரு மெய்டன் ஓவரை செய்து க்ரிஸ் ஜோர்டான் சாதனை படைத்துக் கொண்டார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்