இந்தியாவில் மீண்டும் பகலிரவு டெஸ்ட் போட்டி – பிசிசிஐ ஆலோசனை!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:25 IST)
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் பொருட்டு கடந்த ஓராண்டுக்கு முன்னதாக பகலிரவு டெஸ்ட் போட்டியை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் மற்றும் லிமிடெட்  வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த 5 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி பகலிரவு போட்டியாக நடத்த பிசிசிஐ ஆலோசித்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்