“எங்க தோல்விக்கு காரணம் கோலி, ராகுல் இல்ல… இவங்கதான்” பாக் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:17 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர். இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 128 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த தோல்வி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பேசியுள்ளார். அதில் “வானிலையை நாம் மாற்ற முடியாது. எங்களால் முடிந்த அளவு சிறந்ததைக் கொடுக்க முயன்றோம்.

இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். எங்கள் பவுலர்களின் திட்டங்களை சமாளித்து சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதை அப்படியே பயன்படுத்தி பெரிய இலக்குக்குக் கொண்டு சென்றனர் கோலியும் கே எல் ராகுலும். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் மோசமாக செயல்பட்டோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்