போட்டிக்கு முன்னதாக பேசிய கம்பீர் “கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவரை அணியில் இணைக்க, இஷான் கிஷானை நீக்கிவிடக் கூடாது. இஷான் கிஷான் தான் அணியில் இருக்க வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். அணிக்குள் திறமையான ஒரு வீரரா அல்லது மூத்த வீரரா என்பதை அணிதான் முடிவு செய்யவேண்டும். ” என இஷான் கிஷானுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ராகுலின் பேட்டிங்கின் போது கமெண்ட்ரி செய்த கம்பீர் பேசும்போது “நாம் ஒவ்வொரு போட்டியின் போது கே எல் ராகுலை விமர்சிக்கக் கூடாது. அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளார். அவர் உலகக் கோப்பைக்கான திட்டத்தோடு இருக்கிறார் என்றால் அவரை எல்லா போட்டிகளிலும் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.