சிக்ஸ் அடிச்சாலும் என் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்டநாயகன் அக்ஸ்ர் படேல்!

vinoth
திங்கள், 15 ஜனவரி 2024 (07:53 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.  நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்ற இந்திய அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றிய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அப்போது பேசிய அவர் “இப்போதெல்லாம் நான் எவ்வளவு விக்கெட்கள் எடுக்கிறேன் என்பதையே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் டி 20 கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். நான் பவர்ப்ளே ஓவர்களில் கூட வீச ஆர்வமாக இருக்கிறேன். என் ஓவரில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் அடித்தாலும் நான் கவலைப்படாமல் என் திட்டத்தை மாற்றாமல் வீசுகிறேன். ஏனென்றால் அடுத்த பந்தில் அவர் அவுட்டாக வாய்ப்புள்ளது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்