இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலியா!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:15 IST)
இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான நிசாங்கா மற்றும் பெரரே ஆகிய இருவரும் மட்டும் தலா 61 மற்றும் 78 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு பேட்டிங் செய்த கிட்டத்தட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இலங்கை அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸி அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 36 ஆவது ஓவரில் இலக்கை எட்டி இந்த உலகக் கோப்பையின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஷ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர். 4 விக்கெட்கள் வீழ்த்திய ஆடம் ஸாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்