உலகக்கோப்பை கிரிக்கெட்: 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன இலங்கை..!

திங்கள், 16 அக்டோபர் 2023 (18:24 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக பேட்டிங் செய்ததை அடுத்து 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது.  

இலங்கை அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான நிசாங்கா மற்றும் பெரரே ஆகிய இருவரும் மட்டும் தலா 61 மற்றும் 78 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு பேட்டிங் செய்த கிட்டத்தட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி 210  என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே  இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் முதல்  வெற்றியை எந்த அணி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்