சேவாக்கை போல் என்னையும் செஞ்சுராதீங்க: கதறும் அஸ்வின்!

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (18:25 IST)
நேற்று அயர்லாந்துடன் டி20 போட்டியை முடித்த இந்திய அணி அடுத்து இங்கிலாந்துடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. 
 
இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரவிந்திர ஜடேஜா கழற்றிவிடப்பட்டு சாஹல், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் புதுஜெர்சி அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. அப்போது அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
இதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார், நான் அணிக்கு தேர்வாவதும், பெஞ்சில் அமரவைக்கப்படுவதும் என்னுடைய கிரிக்கெட்டை அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் பொருத்து அமையும். இது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. 
 
மேலும், எனக்கும் தோனிக்கும் மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே தோனிக்கும், சேவாக்குக்கும் மோதல் இருப்பதாக கூறி சேவாக் கதையை முடித்துவிட்டது போல் என் கதையையும் முடித்துவிடாதீர்கள். தோனியுடன் எனக்கு எந்தவிதமான பனிப்போரும், மோதலும் இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்