கிரிக்கெட் வீரர் அம்பாத்தி ராயுடுவின் காரை வழிமறித்த விவசாயிகள்…!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:49 IST)
சென்னை டு சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசக் கிரிக்கெட்டில் அவருக்கு சிறப்பான கேரியர் அமையவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் ஆறு முறை ஐபிஎல் வென்ற அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய உள்ளதாகவும், ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க சென்ற போது அமராவதியைச் சேர்ந்த விவசாயிகள் அவரின் காரை மறித்து “அமராவதியின் ஆந்திராவின் நிரந்தர தலைநகராக இருக்க வேண்டும்” எனக் கூறி அவரை ‘ஜெய் அமராவதி’ எனக் கோஷமிட வற்புறுத்தினர். ஆனால் கோஷமிட மறுத்த அவர் “அமராவதிதான் ஆந்திராவின் தலைநகராக இருக்கும்” எனக் கூறி அங்கிருந்து கிளம்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்