ஆர் சி பி அணியில் இருந்து விலகிய பயிற்சியாளர்கள்.. லேட்டஸ்ட் ஷாக்கிங் செய்தி!

திங்கள், 17 ஜூலை 2023 (08:04 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் கூட ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடியும் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு எப்படியும் ஆர் சி பி அணி கப் அடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஆர் சி பி அணிக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆர் சி பி அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹெஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்