மேல ஏறி வறோம்.. விலகி நில்லு! வங்கதேசத்தை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (10:18 IST)
கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் வரலாற்றில் முதன்முறையாக வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்துள்ளது.



வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் பரபரப்பாக நடந்து வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்களை குவித்த ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை பந்தாட தொடங்கியது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஃபரூகி, முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தானின் அபார பந்து வீச்சால் தாக்கு பிடிக்க முடியாமல் 43வது ஓவரிலேயே வங்கதேச அணி வெறும் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒருநாள் தொடரின் வெற்றியை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடரில் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிதான் அணி.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்