2023 -ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிப்பு

வியாழன், 15 ஜூன் 2023 (20:21 IST)
2023ம் ஆண்டிற்கான ஆசியக்கோப்பை போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடும். இந்த நிலையில், இனத் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறும் என்று கேள்வியாக இருந்தது. இதுகுறித்த பல தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

2023ம் ஆண்டிற்கான ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளும் போட்டியிடுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர்17 ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் நாட்டில் 4  போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளும் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று  அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்