மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

vinoth

வியாழன், 4 ஜூலை 2024 (16:36 IST)
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. அந்த அணி வென்ற போட்டிகளில் கூட மிகவும் சிரமப்பட்டே வென்றது. இதனால் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்குக் கூட முன்னேற முடியவில்லை.

இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பாபர் ஆசாமின் கேப்டன்சியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பாக அவர் திடீரென மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியது. பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளரான கேரி கிரிஸ்டனே “இது ஒரு அணியே இல்லை. வீரர்களுக்குள் ஒற்றுமையே இல்லை” எனப் புலம்பிருந்தார்.

இந்நிலையில்தான் இப்போது பாகிஸ்தான் வீரர்கள் மெத்தையைப் போட்டு அதன் மேல் தாவிகுதித்து ஃபீல்டிங் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரோல்களை சந்தித்துள்ளன. இவ்வளவு சொகுசா பயிற்சியை மேற்கொண்டால் எப்படி போட்டிகளில் வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் ரசிகர்களே கொந்தளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்