ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் வங்கதேசம்..!

வெள்ளி, 16 ஜூன் 2023 (08:54 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி வலுவான நிலையில் உள்ளது. 
 
கடந்த 14ஆம் தேதி தொடங்கிய வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 382 ரன்கள் குவித்தது. 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 146 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி விளையாடி வரும் நிலையில் 23ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேச அணியின் ஜாகிர் உசேன் மற்றும் நிஜ்முல் ஆகிய இருவரும் அரை சதம் அடித்துள்ளனர் 
 
தற்போது வங்கதேச அணி 370 ரன்கள் முன்னணியில் இருப்பதால் இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்