நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
அவருக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் நடிக்காத அசின் திரைப்படம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்தார். இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாள் கொண்டாடும் அசினுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.