உலகிலேயே அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ....

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (17:11 IST)
பாடகர்கள் விஸ்கலிஃபா மற்றும் சார்லி புத் என்ற இரண்டு பேர் சேர்ந்து பாடிய  ‘சீ யு அகெய்ன்’ (See you again) என்ற பாடல் வீடியோ, இதுவரை அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ என்ற சாதனையை பெற்றுள்ளது.


 

 
இந்த வீடியோவை இதுவரை 290 கோடிக்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர். 2015ம் ஆண்டு வெளியான பார்ஸ்ட் ஃப்யூரியஸ் 7 படத்தின் சவுண்ட் டிராக்காக இடம் பெற்ற இப்பாடல், அப்படத்தின் முந்தைய பாகங்களில் நடித்தவரும், கார் விபத்தில் பலியானவருமான ஹாலிவுட் நடிகர் பால்வாக்கருக்கு இசை அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன் 2012ம் ஆண்டு வெளியான கங்னம் ஸ்டைல் பாடல் வீடியோவை 280 கோடிக்கும் மேலானோர் கண்டு ரசித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதன் சாதனையை இந்த வீடியோ முறியடித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்