தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி அளித்த போது, "ரகுபதி சட்டத்துறை அமைச்சரா அல்லது திமுக ரவுடியா?" என்ற சந்தேகம் வருகிறது என்றும், காவல்துறை பயிற்சி மையத்தில் ரவுடிகள் பரேடு நடத்தும் போது அவர்கள் பேசும் மொழியில் தான் சட்டத்துறை அமைச்சர் பேசுவதாகவும் தெரிவித்தார்.
"சபாநாயகர் அப்பாவு கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும். தொண்டர்களை காட்டிலும் சபாநாயகர் அப்பாவு கட்சிக்காக கூடுதல் பணியை செய்து வருகிறார். சட்டசபையில் வேல்முருகன் கேள்வி கேட்டால் அவர் மீது சபாநாயகர் தாவுகிறார். பாஜக எம்எல்ஏக்கள் மீதும் தாவுகிறார். அவர் நடுநிலை தவறி சட்டசபையில் நடந்து கொள்கிறார்," என அண்ணாமலை மேலும் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரே இல்லை என்றும், உச்ச நீதிமன்றம் பல்கலைக்கழக மானிய குழு நடைமுறையின் கீழ் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதனால் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
"தமிழக கவர்னர் வந்த பிறகு, துணைவேந்தர் நியமனம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடக்கிறது. கல்வியில் திமுகவினர் அரசியல் செய்தால் கவர்னர் தன் கருத்தை சொல்லுவார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, லஞ்சம் மற்றும் லாவண்யம் குறித்து எல்லாம் முதல்வருக்கு தெரியாதா? 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இலக்கம், மீதமுள்ள 34 தொகுதிகளில் டெபாசிட் பெறலாம் அல்லது வெற்றி, தோல்வி அடையலாம்," என்று கூறி, 2026 தேர்தல் குறித்த தனது கணிப்பையும் வெளியிட்டார்.