கர்ப்பிணிகளுக்கு மாதுளம் பழங்கள் எந்த வகையில் பயனளிக்கிறது தெரியுமா...?

Webdunia
மாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் என்பன. விட்டமின் சி, கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச்சத்தைக் கிரகிக்க பெரிதும் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு திடீரென்று உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் கூடும். கூடுதலாக நஞ்சுக்கொடியைச் சார்ந்த பிரச்சனைகளும் நிலவும். உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தமும் ஏற்பட்டு இருக்கும். இவ்வாறான உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இருக்கின்ற சமயத்தில் சிறுநீரில் அதிக அளவு புரதம்  வெளியேறும்.
 
கர்ப்பிணிப் பெண்ணின் கை, கால் மற்றும் பாதப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தும் பிரிஎக்லாம்சியா என்னும் பாதிப்பின் அறிகுறிகள்.  மாதுளையில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ராடிக்கல்களின் தடை செய்கின்றன.
 
மாதுளம் பழம் உடலின் இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால் இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை  சாப்பிடுவது உகந்தது.
 
மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அதனால் செரிமானம் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. ஆக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பே கிடையாது. கர்ப்ப  காலத்தில் பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தசைப் பிடிப்புகள் ஏற்படும். இந்த பிரச்சனையைச் சரிசெய்து கொள்ள மாதுளை சரியான தீர்வாக உள்ளது. மேலும்  இந்தப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் காணப்படுகின்றது.
 
கருவில் வளரும் குழந்தைகளுக்குப் போலிக் சக்து இன்றியமையாதது. இந்த சத்தானது குழந்தையில் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இந்த சத்தானது கருவில் உள்ள குழந்தைக்கு போதிய அளவு கிடைத்தால் மட்டுமே குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட செல்கள் சிறப்பாக வளரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்