அவகேடோ பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் என்ன தெரியுமா...?

அவகேடோ பழத்தில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக கொழுப்புகள், மாங்கனீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி , வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. 

அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும்.
 
இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை  சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன. 
 
கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம். சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்.
 
அவகேடோ பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும் உடல் எடையை குறைக்க  நினைப்பவர்கள் இந்த பழத்தை எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
 
இதயம், தோல் மற்றும் தசைகள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும் சிறந்த நிவாரணியாக அவகோடா பழம் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம்  சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்