அமீர்கான் மகளின் அலப்பறை ...! ப்ளீஸ் நீங்க நடிங்க... கெஞ்சி கதறும் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (12:58 IST)
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான  நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 
 
தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு  1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  பின்னர் இவர்களுக்கு  ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டு  கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில்  துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். முதல் மனைவியை பிரிந்தாலும் அமீர்கான் தனது மூன்று குழந்தைகளையும் பாரபட்சமின்றி பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஐரா கான் பாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து எல்லையற்ற கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோஷூட் நடத்தி வருவதோடு அதனை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது தொடை வரை ஸ்லிட் வைத்த வயலட் பேக்லெஸ் கவுன் அணிந்துகொண்டு மல்லாக்க படுத்து போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை  ‘என்ன அருமையான காட்சி’ என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிட்டுள்ளார். அதைப் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் வாயடைத்துப் போனதுடன் ப்ளீஸ் நீங்க நடிக்க உங்ககளை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What a view...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்