பாலிவுட்டுக்கு செல்லும் அல்லு அர்ஜுனின் Ala Vaikunthapurramuloo...

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (12:22 IST)
அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரமுலோ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 
 
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அல வைகுந்தபுரமுலோ. பணக்கார வீட்டில் பிறக்கும் அல்லு அர்ஜுன் விதி வசத்தால் ஏழை ஒருவரின் வீட்டுக்கு மருத்துவமனையிலே மாற்றப்பட 25 ஆண்டுகள் கழித்து தன் தாய் தந்தையரைப் பற்றி தெரிந்து கொண்டு அவர்களோடு எப்படி சேர்கிறார் என்கிற கதை இது. 
 
ஆனால் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடிப்பாலும் பாடல்களாலும் படம் வெற்றி பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதிலும் புட்டபொம்மா பாடல் பயங்கர ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 
 
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. Shehzada என்ற பெயரில் படம் ரீமேக் செய்யப்படவுள்ளது. படம் அடுத்த வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்