இந்தியா- இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (00:28 IST)
2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க திட்டம்Image caption: 2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க திட்டம்.
 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக செயலாளர் ஆனி மேரி ட்ரேவ்லேய்ன் மற்றும் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
இந்த சந்திப்பிற்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ''வரும் 2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் வகையில் இன்றுபேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தை வரும் 17ம் தேதி நடைபெறும். தொடர்ந்து 5 வாரங்களுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
வர்த்தக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, துறைசார்ந்த மேம்பாடுகள் ஏற்படுத்துவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்படும். தோல், ஜவுளி, பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும்''. என்று தெரிவிக்கப்பட்டது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்