ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பெயரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு ஈமெயில் மூலம் ஒரு மிரட்டல் வந்திருப்பதாகவும், அதில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாய்களுடன் சேப்பாக்கம் மைதானத்தை தீவிர சோதனைகள் ஈடுபட்டனர்.
இதுவரை எந்தவிதமான ஆபத்தான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மிரட்டலால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.