சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

Mahendran

வெள்ளி, 9 மே 2025 (15:44 IST)
பாகிஸ்தானை இந்தியா கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தும் நிலையில்,  மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானில் கிளர்ச்சிக்காரர்கள் ராணுவத்தை தாக்கி வருகின்றனர். பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாட்டாக உருவாக விரும்பும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள், இந்தியா ஏற்படுத்தும் அழுத்தத்தை தங்கள் அரசியல் இலக்குகளுக்குக் பயன்படுத்தி வருகின்றனர்.
 
பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்  என்ற அமைப்பினர், பல முக்கிய ராணுவ முகாம்களை கைப்பற்றியதாகவும், முக்கிய நகரமான குவெட்டா உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
BLA அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச் கூறியதாவது, "எங்கள் போராளிகள் கெச், மஸ்துங், கச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகள், தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கையெறிகணைகள் பயன்படுத்தப்பட்டன" என கூறினார்.
 
இந்த தாக்குதல்களின் இலக்காக பாகிஸ்தான் இராணுவத்துடன் கூட முக்கிய விநியோக பாதைகள், ராணுவ ஆதரவு அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே இந்தியா மூலம் அழுத்தம் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இத்தகைய கிளர்ச்சி நடவடிக்கைகள், மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்