டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மறுத்த முன்னாள் அமெரிக்க துணை அதிபர்

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (09:44 IST)
முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜோ பைடன் கடந்த வருடம் அதிபர் ஆவதை என்னால் தடுத்திருக்க முடியும் என்ற டொனால்ட் டிரம்பின் கூற்றை மறுத்துள்ளார்.


தேர்தலை மாற்றி அமைத்திருக்க முடியும் என்று டிரம்ப் கூறியது தவறு என்று கூறியுள்ளார்.

குடியரசு கட்சி, கேப்பிட்டல் கலவரத்தை விசாரணை செய்த தனது 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்துள்ளது. ஜோ பைடன் அதிபர் ஆனதை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடந்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி கேப்பிட்டலில் கூடியபோது, ஒரு கும்பல் உள் நுழைந்தது.

இந்தக் கலவரத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்