நேஷனல் பாங்க் ஆஃப் குவைத்தில் தீவிபத்து

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (15:23 IST)
துபாயில் உள்ள நேஷனல் பேங்க் ஆஃப் குவைத்தின் கட்டுமானப் பணிகள் நடபெற்று வந்த தலைமையகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

துபாயின் ஷார்க் நகரில் உள்ள நேஷனல் பாங்க் ஆஃப் குவைத்தின் தலைமையக கட்டிடத்தில் கட்டுமாணப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த கட்டிடத்தில் தீப்பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

வேகமாகப் பரவிய தீயால் அந்த பகுதி கரும்புகையால் சூழப்பட்டு புகைமண்டலமாக மாறியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறை வேகமாக செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

நேஷனல் பாங்க் ஆஃப் குவைத் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறைக்கும் துபாய் உள்துறை அமைச்சகத்திற்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீவிபத்துக்கான் காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்