7 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இளம்பெண்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (14:57 IST)
ஆஸ்திரேலியாவில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் ஏழாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். கிட்டத்தட்ட 21 மீட்டர் உயரத்தில் இருந்து அவர் விழுந்த நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அங்கு அவருக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து அவர்கள் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் தனது மகள் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்