பெண்கள் எப்போதும் பாதிரியாராக முடியாது: போப் பிரான்சிஸ்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (20:37 IST)
கத்தோலிக்க திருச்சபைகளில் பெண்கள் எப்போதும் பாதிரியாராக முடியாது என போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.


 

 
இதுகுறித்து போப் பிரான்சிஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
இது தொடர்பான விவகாரத்தில் புனிதர் போப் ஜான்பால் கூறியதே இறுதியானது. 1994ஆம் ஆண்டில் போப் ஜான்பாலின் ஆவணத்தை சுட்டிக்காட்டி, அதில் பெண்கள் பாதிரியாராக மாறுவது தடை செய்திருப்பதை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
புனித போப் ஜான்பாலின் ஆவணத்தை நாம் கூர்ந்து படிப்போமேயானால், அது அவ்வழியையே காட்டிநிற்கிறது, என்றார்.
அடுத்த கட்டுரையில்