ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

Prasanth K

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (09:15 IST)

இந்தியாவிற்கு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவுடம் வர்த்தகம் செய்யும் சீனாவிற்கு வரி விதிக்காதது குறித்து அதிபர் ட்ரம்ப் மழுப்பலான விளக்கத்தை அளித்துள்ளார்.

 

உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவிற்கும் 50 சதவீத வரிவிதிப்பை அறிவித்தார். அதற்கு காரணமாக இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சொன்னார் ட்ரம்ப். இதனால் ரஷ்யா பொருளாதாரத்தை இந்தியா மறைமுகமாக ஊக்குவிப்பதாகவும், அதனால் உக்ரைன் போர் தீவிரமடைவதாகவும் காதை சுற்றி மூக்கைத் தொட்டார்.

 

ஆனால் அதே ரஷ்யாவிடம் சீனாவும் கச்சா எண்ணெய்களை வாங்கி வருகிறது. ஆனால் சீனா மீது இப்படியான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மௌனம் காக்கிறது அமெரிக்கா. இதுகுறித்து விளக்கம் என்ற பெயரில் மழுப்பலான பதில் அளித்த ட்ரம்ப் ”ரஷ்யாவிடம் சீனா அதிக எண்ணெய் வாங்கும் நிலையில், அதன் மீதான எந்த ஒரு தடையும் உலகளாவிய எரிசக்தி விலைகளை உயர்த்தக்கூடும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்