முந்தைய சாதனையை முறியடித்த பிரதமர் மோடி.. 103 நிமிடங்கள் சுதந்திர தின பேசி புதிய சாதனை

Mahendran

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (11:11 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் இன்று ஆற்றிய 79வது சுதந்திர தின உரை, வரலாற்றிலேயே மிக நீண்ட உரையாக அமைந்தது. அவர் மொத்தம் 103 நிமிடங்கள் உரையாற்றினார், இதன் மூலம் தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
 
பிரதமர் மோடி காலை 7.33 மணிக்கு தனது உரையைத் தொடங்கி, 9.16 மணிக்கு முடித்தார். 2024 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய 98 நிமிட உரைதான் இதற்கு முன்னர் அவரது மிக நீண்ட உரையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். 
 
மேலும், இந்த உரையுடன், செங்கோட்டையிலிருந்து தொடர்ச்சியாக 12வது முறையாக சுதந்திர தின உரை ஆற்றியதன் மூலம், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து, ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். நேரு தொடர்ச்சியாக 17 முறை செங்கோட்டையில் உரையாற்றியுள்ளார்.
 
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய முதல் சுதந்திர தின உரை 65 நிமிடங்கள் நீடித்தது. 2015ல் 85 நிமிடங்கள், 2016ல் 96 நிமிடங்கள், 2019ல் 92 நிமிடங்கள் மற்றும் 2023ல் 90 நிமிடங்கள் என அவரது உரைகள் நீண்டுள்ளன. அவரது மிக குறுகிய உரை 2017ல், 56 நிமிடங்கள் மட்டுமே.
 
பிரதமர் மோடி தனது 103 நிமிட உரையில், அரசின் பல்வேறு சாதனைகளைப் பற்றியும், தேசத்தின் கடந்த கால சாதனைகள், நிகழ்கால சவால்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையாக அமைந்தது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்