பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

Mahendran

வெள்ளி, 15 ஆகஸ்ட் 2025 (12:26 IST)
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை, நாட்டின் கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சி பாதைக்கான ஒரு விரிவான வரைபடம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார். இந்த பேச்சு, நாட்டின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கியதாக இருந்ததாக அமித் ஷா தெரிவித்தார்.
 
அமித்ஷா தனது பாராட்டில், பிரதமரின் இந்த உரை, கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது என்று குறிப்பிட்டார். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு, மற்றும் சமூக நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டினார். “பிரதமர் மோடி, ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையை இந்த உரை மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்” என்று அமித் ஷா கூறினார்.
 
மேலும், அமித் ஷா கூறுகையில், “பிரதமரின் உரை, கடந்த கால சாதனைகளை மட்டுமின்றி, எதிர்கால இந்தியாவுக்கான இலக்குகளையும் தெளிவாக நிர்ணயித்துள்ளது” என்றார். 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்