கிருமி நாசிபி தெளிப்பதால் கொரோனா அழியும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சாலைகள் மற்றும் வீதிகளில் கிருமி நாசினிக்கள் தெளிக்கப்படுகின்றன. மேற்கொண்டு பல இடங்களில் கிருமி நாசினி சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுவெளியில் கொரோனா பரவாது என நம்பி வந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலில் “கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளில் வீதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. ஆனால் வெளிப்பகுதிகளில் உள்ள தூசுக்கள் மற்றும் துகள்களின் காரணமாக கிருமி நாசினிக்கள் வீரியம் இழந்துவிடும். இதனால் கொரோனாவை அழிக்க முடியாது. மேலும் கிருமி நாசினிக்கள் தெளிப்பது மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பதை உலக சுகாதார அமைப்பு ஆதரிக்கவில்லை” என கூறப்பட்டுள்ளது.