இந்த நிலையில் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்காக மாணவர்கள் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த தேர்வின்போது செய்து தரப்படும் என்றும் தனிமனித இடைவெளியுடன் இந்த தேர்வு நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் சமீபத்தில் இந்த தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜூன் 1-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.