கொரோனா தொற்றுக்கு பொதுவான ஒரு தடுப்பு மருந்து இல்லாத நிலையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகள் பின்பற்ற படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் என்ற மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஏராளமாக இந்தியாவிடம் இருந்து அடாவடியாக வாங்கி பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.
இப்போது இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதை WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று (மே 25) நடந்த காணொலி பத்திரிகையாளர் சந்திப்பின் போது ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெறும் நோயாளிகள் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை விட அதிக விகிதத்தில் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் கடந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பல நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தியானது மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.