ஜூன் 30 வரை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் வேலைக்கு வர வேண்டாம்: தமிழக அரசு

புதன், 3 ஜூன் 2020 (15:58 IST)
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு பணியாளர்கL ஜூன் 30ம் தேதி வரை வேலைக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு செல்ல திரும்பி உள்ளனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வது சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான 4 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் மட்டும் வேலைக்கு வரவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதன்படி சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் ஜூன் 30 வரை வேலைக்கு வரவேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்