உலக சுகாதார அமைப்பையும் விட்டுவைக்காத கொரோனா! – அதானம் ட்வீட்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (08:09 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வந்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனரையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கி போயுள்ள நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தல், பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுதல் போன்றவற்றில் தொடர்ந்து உலக நாடுகளுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது உலக சுகாதார அமைப்பு.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் கொரோனா உள்ள நபர் ஒருவரோடு நேரடியாக தொடர்பு கொள்ள நேர்ந்ததன் விளைவாக இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும், சில வாரங்களுக்கு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்