ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த வங்கதேச நீதிமன்றம்: கைதாவாரா?

Mahendran
வியாழன், 17 அக்டோபர் 2024 (16:10 IST)
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை கைது செய்யும் நோக்கில், அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், நவம்பர் 18க்குள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு தொடர்பாக வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை சமாளிக்க முடியாத சூழலில், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து  இந்தியாவிற்கு சென்று தஞ்சம் புகுந்தார்.

இந்தச் சூழலில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில்,  வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஷேக் ஹசினா, தனது ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  

இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அரசு தரப்பு வழக்கறிஞர் முகமது தாஜூல் இஸ்லாம் கூறியதாவது: "ஷேக் ஹசினா, நாட்டை விட்டு வெளியேறியதிலிருந்து, மக்களை சந்திக்கவில்லை. அவர் இந்திய தலைநகர் டெல்லி அருகே உள்ள ராணுவ பகுதியில் இருக்கிறார் என அறிகின்றோம்."

இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை நவம்பர் 18க்குள் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்