எரிமலையில் சிக்கி பலியான இந்திய தொழிலதிபர்! திடுக்கிடும் தகவல்

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (20:19 IST)
இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் தொழில் அதிபராக இருந்து வந்த பிரதாப் சிங் என்ற தொழிலதிபர் தனது மனைவியுடன் நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் பிரதாப் சிங் என்பவர் தனது மனைவி மயூரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் நியூசிலாந்து நாட்டில் உள்ள வெள்ளை தீவு என்ற பகுதிக்கு கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா சென்றனர். பிரதாப் சிங் அவர்களின் மூன்று குழந்தைகளும் கப்பலிலேயே தங்கியிருக்க பிரதாப் சிங் மற்றும் மயூரி மட்டும் வெள்ளை தீவில் இறங்கி சென்றனர். அப்போது திடீரென அங்கிருந்த எரிமலை ஒன்று வெடித்து சிதறியதில் பலத்த தீக்காயமடைந்த பிரதாப் சிங் மற்றும் மயூரி ஆகியோர் நியூசிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் 
 
இதில் சிகிச்சையின் பலனின்றி மயூரி அவர்கள் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி மரணம் அடைந்த நிலையில் பிரதாப் சிங் அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்தில் பிரதாப்சிங், மயூரி ஆகிய இருவருமே பலியானதால் அவரது குடும்பமே சோகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்