எரிமலை வெடித்ததால் எழுந்த ராட்சத கரும்புகை: வைரல் வீடியோ

ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (17:27 IST)
இத்தாலி நாட்டில், எரிமலை ஒன்று வெடித்ததால் எழுந்த ராட்சத கரும்புகையை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இத்தாலி நாட்டில் தைரேனியன் கடல் பகுதியில் உள்ளது ஸ்ட்ராம்போலி தீவு. இத்தீவில் ஸ்ட்ராம்போலி எரிமலை உள்ளது. கடந்த புதன்கிழமை இந்த எரிமலை வெடித்து அதிக அளவிலான எரிமலை குழம்பை வெளியேற்றியது.

இதில் ஒருவர் பலியானார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று வெடித்துள்ளது. இரவு சுமார் 9 மணியளவில் மிகப்பெரிய சத்ததுடன் எரிமலை வெடித்து குழம்பை கக்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் எரிமலை வெடித்து ராட்சத புகைமூட்டம் மேலெழுவதை சிசிலி நாட்டைச் சேர்ந்த 19 வயது சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் அந்த எரிமலையின் அருகே உள்ள கடலில் படகில் சென்றுகொண்டிருக்கும் போது பின்னால் எரிமலை பிரம்மாண்ட புகையை கக்குகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Eruzione vulcano di Stromboli ore 12:17.. sopravvissuti per miracolo

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்