அடிமைகளை வெச்சு செய்ற பருத்தி வேண்டாம்! – சீனாவுக்கு அமெரிக்கா தடை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:11 IST)
சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பருத்தி துணிகள் உய்குர் முஸ்லிம்களை அடிமையாக வைத்து தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க சீன பருத்தி பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு பருத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனா அங்கு சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லீம்களை சர்வாதிகார போக்குடன் அணுகுவதாகவும், அவர்களை கொத்தடிமையாக பயன்படுத்தி பருத்து பொருட்களை தயாரிப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா சபை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் உய்குர் முஸ்லீம்கள் மீது எந்த வன்முறையும் சீனா மேற்கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு முறையான ஊதியத்துடனே பருத்தி ஆலைகளில் பணி புரிகின்றனர் என்றும் சீனா விளக்கமளித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பருத்தி துணி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்