திமிங்கலத்தின் வாந்தியால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர் !

புதன், 2 டிசம்பர் 2020 (21:10 IST)
இந்த உலகம் பல அதிசயம் மற்றும் ஆச்சர்யங்களால் நிரம்பியுள்ளது.  இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த  ஒரு மீனவர் திமிங்கலம் வாந்தி எடுத்த பொருளால் இன்று கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
 
உலகில் மிகப்பெரிய விலங்கினமான திமிங்கலம் கடலில் வாழுகிறது. இது வாந்தி எடுக்குமோது,  அதன் செரிமானத்திற்கு உதவுகின்ற ஆசிட் போன்ற பொருளை குறிப்பிட்ட சமயத்தில் கக்கிவிடுவதாக தெரிகிறது.
 
அப்படி திமிங்கலம் வாந்தி எடுக்கும்போது பொருள் அம்பெர்கிரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து வாசனையில்லாத ஆல்கஹால் இருப்பதாகவும், இதை வாசனைத் திரவியத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த வாசனை எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாமல் இருக்கும் எனவுக் கூறப்படுகிறது.
 
அதனால் இதற்கு கிராக்கி அதிகம் என்பதால் இதன் விலையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த  நரிஸ் சுவாங் சாங் கடலில் மீன்பிடிக்கும்போது 100 கிமோ அம்பெர்கிரிஸ் என்ற திமிங்கல வாந்தியைச் சேகரித்து வைத்திருந்தவருக்கு அதன்மதிப்பு தெரியவில்லை.

பின்னர் யாரோ ஒருவர் மூலம் இதை விற்றுள்ளார். இது சுமார் ரூ.25 கோடிக்கு விலைபோயுள்ளது. அதனால் ஒரே நாளில் கோடீஸ்வரராகி விட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்